தேன்கனிக்கோட்டை அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளி போக்சோவில் கைது

Update: 2023-04-21 19:00 GMT

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியின் 17 வயது மகள் கடந்த 8-ந் தேதி தனக்கு வாந்தி வருவதாக தாயிடம் கூறினார். இதையடுத்து சிறுமியை அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில் சிறுமி 6 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த தாய் மகளிடம் கேட்டபோது அதே பகுதியை சேர்ந்த ராமசாமி மகனான கூலித்தொழிலாளி கிருஷ்ணமூர்த்தி (வயது 33) என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டினாராம். இது குறித்து சிறுமியின் தாய் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பூர்ணம் சிறுமியை கர்ப்பமாக்கிய கிருஷ்ணமூர்த்தி மீது போக்ேசா சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்