வாலிபரிடம் செல்போன் பறித்தவர் கைது

வாலிபரிடம் செல்போன் பறித்தவர் கைது ெசய்யப்பட்டார்.

Update: 2023-04-18 18:45 GMT

முதுகுளத்தூர், 

முதுகுளத்தூர் அருகே உள்ள பாண்டி கண்மாய் விளக்கு ரோட்டில் வெண்ணீர் வாய்க்கால் கிராமத்தை சேர்ந்த பால்பாண்டி(வயது 23) நின்று கொண்டிருந்தார். இவர் முதுகுளத்தூர் செல்ல அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிளில் லிப்ட் கேட்டு ஏறி சென்றார். முதுகுளத்தூர் மின்சார வாரிய அலுவலகத்திற்கு அருகே சென்றபோது அந்த நபரும், அங்கு நின்று கொண்டிருந்த மற்றொரு நபரும் பால்பாண்டியனை மிரட்டி செல்போனை பறித்து சென்றனர். இதுகுறித்து முதுகுளத்தூர் போலீசில் பால்பாண்டியன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் செல்போனை பறித்தது செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அரவிந்தன்(22), பொதிகுளம் கிராமத்தை சேர்ந்த விஜய மூர்த்தி(22) என்பது தெரிந்தது. இதையடுத்து அரவிந்தனை முதுகுளத்தூர் போலீசார் கைது செய்தனர். விஜய் மூர்த்தியை மற்றொரு வழக்கில் கடலாடி போலீசார் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்