பா.ஜ.க. தலைவரை கொல்ல முயன்ற வழக்கில் மேலும் ஒருவர் கைது

மாவட்ட பா.ஜ.க. தலைவரை கொல்ல முயன்ற வழக்கில் மேலும் ஒருவர் கைது ெசய்யப்பட்டார்.

Update: 2023-04-18 18:45 GMT

ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. தலைவர் தரணி முருகேசனை கடந்த 2 நாட்களுக்கு முன்னர் 2 மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் கொலை செய்ய முயன்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கூலிப்படையை சேர்ந்த சென்னை எண்ணூர் மோகன் (வயது 34), புது வண்ணாரப்பேட்டை ஜீவாநகர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த கப்பலேஷ் சுரேஷ் (35), ராமநாதபுரம் அம்மாபூங்கா பகுதியை சேர்ந்த சேட்டை பாலா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ராமநாதபுரம் பசும்பொன்நகரை சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ்வரன் (30) என்பவரை போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.

இதன்படி மாவட்ட பா.ஜ.க. தலைவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் இதுவரை கூலிப்படையை சேர்ந்த 2 பேர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் தொடர்புடையதாக கருதப்படும் முன்னாள் நிர்வாகி கதிரவன், சண்முகநாதன் ஆகியோரை போலீசார் தேடிவருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்