பரமத்திவேலூர்:
கொந்தளம் அருகே உள்ள பொன்மலர்பாளையத்தை சேர்ந்தவர் சிவகுருநாதன் (வயது 40). இவருடைய மனைவி பவ்யா (36). சிவகுருநாதனின் அண்ணன் வஜ்ரவேல் (44). இவர் சென்னை ஆலந்தூரில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வஜ்ரவேல் பொன்மலர்பாளையத்துக்கு வந்தார். அப்போது முன்விரோதம் காரணமாக சிவகுருநாதனின் மனைவி பவ்யாவுக்கும், வஜ்ரவேலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த வஜ்ரவேல், பவ்யாவை ஆபாச வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பவ்யா பரமத்திவேலூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வஜ்ரவேலை கைது செய்தனர்.