வாலிபரிடம் பணம் பறித்த 2 பேர் கைது

வாலிபரிடம் பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-04-13 18:45 GMT

சிவகாசி, 

சிவகாசி விஜயலட்சுமி காலனியை சேர்ந்தவர் குமார் மகன் கணேசன் (வயது 27). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று கணேசன் அங்குள்ள முத்துமாரியம்மன் கோவில் அருகில் வந்த போது மணிகண்ட பிரபு என்கிற செவக்காடு (26), மணிகண்டன் என்கிற புளுக்கை (26) ஆகியோர் கணேசன் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவரது சட்டைபையில் இருந்த ரூ.1000-த்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து கணேசன் சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்