ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் மகன் கைது
ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் மகன் கைது செய்யப்பட்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணப்பேரியை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது46). இவர் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் விவசாயமும் செய்து வந்தார். நேற்று முன்தினம் ஆறுமுகம் தனது வீட்டில் படுகாயங்களுடன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுகுறித்து கிருஷ்ணப்பேரி கிராம நிர்வாக அதிகாரி உமாராணி மல்லி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் ஆறுமுகத்தின் மகன் மணிகண்டன்(23) குடும்ப தகராறு காரணமாக அவரை கட்டையால் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டனை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.