ஓசூர்:
ஓசூர் எம்.ஜி. சாலையை சேர்ந்தவர் வர்தமான் (வயது 45). செல்போன் கடை வைத்துள்ளார். இவருடைய கடையில் ஓசூர் தாசரப்பேட்டையை சேர்ந்த மாருதி (24) என்பவர் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் வர்தமான கடையில் இருந்த ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் ஒன்று திருட்டு போனது. இதுகுறித்து அவர் ஓசூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் திருட்டு போன செல்போன் எண்ணின் ஐ.எம்.இ. எண் மற்றும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் செல்போனை திருடியது கடையில் வேலை செய்து வந்த மாருதி என தெரிய வந்தது. இதையடுத்து மாருதியை போலீசார் கைது செய்தனர். மேலும் திருடப்பட்ட செல்போனும் மீட்கப்பட்டது.