வழக்குகளில் ஆஜராகாமல் இருந்த 7 பேர் கைது

வழக்குகளில் ஆஜராகாமல் இருந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-04-08 18:45 GMT

சிவகங்கை மாவட்டத்தில் ரவுடிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் உத்தரவின் பேரில் ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. துரை மேற்பார்வையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையில் மாவட்டம் முழுவதும் நள்ளிரவில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. இதில் இரவில் காரணம் இன்றி சுற்றித்திரிந்த 78 பேரை போலீசார் பிடித்தனர். அத்துடன் 2 ஆண்டுகளுக்கு மேலாக கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டு வழக்குகளில் ஆஜராகாமல் வாரண்டு பிறப்பிக்கப்பட்டு இருந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்டம் முழுவதும் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த 22 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. போலீசார் நடத்திய இந்த சோதனையில் 684 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. குற்றவாளிகள் மற்றும் ரவுடிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க மாவட்டத்தில் 97 இடங்களில் தங்கும் விடுதிகளில் சோதனை செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்