அரூர்:
கோட்டப்பட்டி அருகே உள்ள வேலனூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 50). விவசாயி. இவர் அந்த பகுதியில் உள்ள தனது அண்ணனின் நிலத்தை டிராக்டர் மூலம் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த வெங்கடேசன் (37) மற்றும் சிலர் விவசாய பணிகளை மேற்கொள்ள கூடாது என்று கூறி கோவிந்தராஜை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த கோவிந்தராஜ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இது தொடர்பான புகாரின் பேரில் கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசன் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனா்.