வாலிபரிடம் நகை பறித்த 2 பேர் கைது

வாலிபரிடம் நகை பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-04-04 18:45 GMT

ராமநாதபுரம் வைகை நகரை சேர்ந்தவர் சத்தியநாராயணன் (வயது 28). கட்டிட வடிவமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

ராமநாதபுரம் ரோமன் சர்ச் பகுதியில் வந்தபோது காரில் வந்த 4 பேர் சத்தியநாராயணன் மற்றும் அவரின் நண்பர்களிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும், சத்திய நாராயணன் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலி மற்றும் 3 கிராம் டாலர் ஆகியவற்றை பறித்து கொண்டு காரில் தப்பி சென்றனர்.

இதுகுறித்து சத்திய நாராயணன் ராமநாதபுரம் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமநாதபுரம் எம்.எஸ்.கே.நகரை சேர்ந்த சூர்யா (25), மோகன் (20) ஆகியோரை கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் தேடிவருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்