வெப்படை அருகே வனப்பகுதியில் நாட்டுத்துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 4 பேர் கைது
பள்ளிபாளையம்:
வெப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் நேற்று மாலை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வெள்ளிக்குட்டை முனியப்பன் கோவில் அருகில் வனப்பகுதியில் நாட்டுத்துப்பாக்கிகளுடன் சிலர் சுற்றித்திரிவது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் சங்ககிரியை சேர்ந்த சண்முகசுந்தரம் (வயது 48), பிரகாஷ் (29), வெங்கடாசலம் (50), ரமேஷ் (46) என்பதும், முயல்களை வேட்டையாட வனப்பகுதியில் சுற்றித்திரிந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்து, 2 நாட்டுத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.