திருப்பத்தூர் அருகே தாய், மகனை அடித்துக்கொன்றவர் கைது
திருப்பத்தூர் அருகே தாய், மகனை அடித்துக்கொன்றவர் கைது ெசய்யப்பட்டார்.
திருப்பத்தூர், மார்ச்.30-
திருப்பத்தூர் அருகே தாய், மகனை அடித்துக்கொன்றவர் கைது ெசய்யப்பட்டார்.
தாய்-மகன் கொலை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே துவார் ஊராட்சிக்கு உட்பட்ட பூமலை பகுதியை சேர்ந்தவர் சாத்தையா. இவரது மனைவி அடக்கி (60), மகன் சின்னக்கருப்பன்(26) ஆகிய இருவரும் கடந்த மார்ச் 27-ந் தேதி மர்மமான முறையில் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இந்த இரட்டை கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆத்மநாபன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரவீந்திரன், விஜயன் சப்-இன்ஸ்பெக்டர்கள் அய்யனார் முத்துக்கருப்பன் போலீசார் பாபு, குமார் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட போலீசாரை கொண்டு 2 குழுவாக பிரிந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இரட்டைக் கொலையில் ஈடுபட்டது பூலாங்குறிச்சி புதுவளவு பகுதியைச் சேர்ந்தவர் சின்னையா என்ற சுழியன்(65) என தெரியவந்தது. அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் அவர் பூலாங்குறிச்சி பொங்கல் நகரில் புதிதாக வீடு கட்டி வருகிறாராம். அந்த வீட்டின் அடித்தளத்திற்கு மண் போடுவதற்காக பூமலை கண்மாயில் சவுடு மண் எடுத்துள்ளார். அதை பாா்த்த சின்னகருப்பன் மண் அள்ள விடாமல் தடுத்துள்ளார்.
கைது
இதனால் சின்னையாவுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. பின்னர் சின்னையா மது அருந்திவிட்டு பூமலை கண்மாய் கரையில் படுத்திருந்த சின்ன கருப்பனை மண் அள்ள விடாமல் தடுத்ததாக கூறி தகராறு செய்துள்ளார்.
மேலும் மண்வெட்டியால் தாக்கினர். அப்போது சின்னக்கருப்பனின் தாயார் அடக்கி சின்னையாவை தடுத்துள்ளார். இதனால் 2 பேரையும் அவர் அடித்து கொன்று இருப்பது தெரியவந்தது. போலீசார் சின்னையாவை கைது செய்தனர்.