பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் 3 பேர் கைது

பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-03-28 18:49 GMT

மேலூர், 

மேலூர் அருகே திருவாதவூரை சேர்ந்தவர் ராஜாமுகமது. இறைச்சி கடை வியாபாரி. சம்பவத்தன்று நள்ளிரவில் இவரது வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றனர். இந்த சம்பவம் குறித்து மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய திருவாதவூரை சேர்ந்த சுந்தரபாண்டி (26), ஆனந்தகுமார் (20) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்