பாலக்கோடு:
பாலக்கோடு பகுதியில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை வாங்கி அதனை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பாலக்கோடு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாலக்கோடு அருகே உள்ள பெல்ரம்பட்டி கூட்ரோட்டில் சின்னராஜ் (வயது 64), கணபதி நகரில் ரமேஷ் (42) ஆகியோர் வீடுகளில் பதுக்கி வைத்து, மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 30 குவார்ட்டர் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.