பெங்களூருவில் இருந்து சேலத்துக்குகாரில் ரூ.4.21 லட்சம் குட்கா கடத்திய வடமாநில வாலிபர் கைது

Update: 2023-03-13 19:00 GMT

ஓசூர்:

பெங்களூருவில் இருந்து சேலத்துக்கு காரில் ரூ.4.21 லட்சம் குட்கா கடத்திய வடமாநில வாலிபர் கைது செய்யப்பட்டார்.

குட்கா கடத்தல்

ஓசூர் சிப்காட் போலீசார் ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக பெங்களூருவில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் 352 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான பான்பராக், பான்மசாலா, குட்கா ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மதிப்பு ரூ.4 லட்சத்து 21 ஆயிரத்து 600 ஆகும்.

கைது

இதையடுத்து குட்கா பொருட்களுடன் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து காரில் குட்கா கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலம் ஜாலோர் மாவட்டத்தை சேர்ந்த பலவந்த்ராம் (23) என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் இந்த குட்கா பொருட்கள் பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக சேலத்துக்கு கடத்தப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்