சுடுகாட்டு ஊழியரை தாக்கியவர் கைது
சுடுகாட்டு ஊழியரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
மதுரை செல்லூர் தத்தனேரி பாக்கியநாதபுரத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 60). இவர் தத்தனேரி சுடுகாட்டில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அங்கு கார்த்திக் என்ற கிடாரி (23) என்பவரும் ஊழியராக உள்ளார். சம்பவத்தன்று அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த கார்த்திக் பீர்பாட்டிலால் சேகரை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.