கல்லூரி மாணவியிடம் தகராறு செய்தவர் கைது

Update: 2023-03-09 19:00 GMT

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை அடுத்த குருபரப்பள்ளியை சேர்ந்தவர் 18 வயது கல்லூரி மாணவி. அதே பகுதியை சேர்ந்தவர் நாகபூஷணம் (வயது 38). உறவினர்களான இவர்களின் குடும்பத்தினர் இடையே நிலம் தொடர்பாக பிரச்சினை இருந்தது. இந்த நிலையில் கல்லூரி சென்று திரும்பிய மாணவியிடம் நாகபூஷணம் தகராறு செய்து தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து கல்லூரி மாணவி கொடுத்த புகாரின்பேரில் நாகபூஷணத்தை தேன்கனிக்கோட்டை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்