மது விற்ற மூதாட்டி கைது

Update:2023-03-06 00:30 IST

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி மற்றும் போலீசார் நேற்று மாலை மெனசி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த லட்சுமி (வயது 70) என்பவர் வீட்டில் மது பாட்டில்களை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்தது தெரிவந்தது. இதையடுத்து லட்சுமியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 26 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்