கார் சர்வீஸ் சென்டர் உரிமையாளரை தாக்கிய 2 பேர் கைது

Update:2023-03-03 00:30 IST

தேன்கனிக்கோட்டை:

நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர் சாபுஜோசப் (வயது 41). இவர் பெங்களூருவில் கார் சர்வீஸ் சென்டர் வைத்துள்ளார். தற்போது குடும்பத்துடன் அங்கேயே தங்கி உள்ளார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன் கர்நாடக மாநிலம் ஆனேக்கல் தொனவாராவை சேர்ந்த சதீஷ் என்பவரிடம் அவருக்கு சொந்தமான தேன்கனிக்கோட்டை அடுத்த பெலகரை பகுதியில் இருந்த ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி பண்ணை வீடும் கட்டியுள்ளார்.

நிலம் வாங்கியதில் இருவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 27-ந் தேதி பெலகரை பண்ணை வீட்டுக்கு குடும்பத்துடன் சென்ற சாபு ஜோசப்பிடம் சதீஷ் தரப்பை சேர்ந்த ஆனேக்கல்லை சேர்ந்த மது (26), பெலகரை மாதேஷ் (25) ஆகியோர் தகராறு செய்தனர். மேலும் பண்ணை வீட்டின் ஜன்னல் கண்ணாடி மற்றும் கழிவறை கதவுகளை அடித்து சேதபடுத்தினர். இதுகுறித்து சாபுஜோசப் கொடுத்த புகாரின் பேரில் தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து மது, மாதேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்