முன் விரோதத்தில் தொழிலாளியின் ஸ்கூட்டரை எரித்தவர் கைது
முன் விரோதத்தில் தொழிலாளியின் ஸ்கூட்டரை எரித்தவர் கைது செய்யப்பட்டார்.;
அன்னதானப்பட்டி:
சேலம் நெத்திமேடு கேபி கரடு தென்புறம் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 31), கூலித்தொழிலாளி. இவருக்கும், அதே தெருவில் வசித்து வரும் பரமசிவம் (30) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு பரமசிவம் மணிகண்டனின் ஸ்கூட்டரை அதே பகுதியில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டதாக கூறப்படுகிறது. இதில் வண்டி எரிந்து பலத்த சேதமடைந்தது. இது குறித்து மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இது தொடர்பாக பரமசிவத்தை நேற்று போலீசார் கைது செய்தனர்.