மின்சாரம் தாக்கி தொழிலாளி படுகாயம்: அனுமதியின்றி மின்வேலி அமைத்த 4 பேர் சிக்கினர்
பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பூனையானூரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 27). சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் மின்வேலியில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் அனுமதியின்றி மின்வேலி அமைத்த பூனையானூரை சேர்ந்த சண்முகம் (57), மகேந்திரன் (47), மோளையானூர் பாரதிநகரை சேர்ந்த சுரேஷ் (40), சிவக்குமார் (46) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.