பாப்பிரெட்டிப்பட்டி அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது

Update: 2023-02-09 18:45 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள இருளப்பட்டியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ஏ.பள்ளிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன், ஏட்டு அகத்தியன் ஆகியோர் நேற்று மதியம் இருளப்பட்டி காணியம்மன் கோவில் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை நிறுத்தி சோதனை செய்தனர். அவர்கள் வைத்திருந்த பையில் 2½ கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் இருளப்பட்டியை சேர்ந்த ராஜா மகன் விஜய் (வயது 25), தேவேந்திரன் மகன் பாலகிருஷ்ணன் (25) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் 2½ கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யபட்டது.

மேலும் செய்திகள்