மத்திகிரியில்மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது

Update: 2023-02-01 18:45 GMT

மத்திகிரி:

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா சென்னப்பகொட்டாயை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 23). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 29-ந் தேதி மத்திகிரி ஆனேக்கல் சாலையில் கொத்தஜிகூர் பகுதியில் தனது மோட்டார்சைக்கிளை நிறுத்தி இருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார்சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து வேல்முருகன் மத்திகிரி போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாகன சோதனை நடத்தினர். அப்போது மத்திகிரி பகுதியில் மோட்டார்சைக்கிளில் வந்த ஒருவரை சோதனை செய்த போது அவர் ஓட்டி வந்தது திருட்டு வாகனம் என்றும், வேல்முருகனிடம் இருந்து திருடப்பட்டதும் தெரியவந்தது.

விசாரணையில் மோட்டார் சைக்கிளை திருடியவர் புலியேந்திரன் (32) என்பதும், திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே உள்ள கல்ராம்பட்டியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்