திண்டல் அருகேநிலத்தகராறில் இருதரப்பினர் மோதல்; ஒருவர் கைது

Update: 2023-01-29 18:45 GMT

காரிமங்கலம்:

காரிமங்கலம் அடுத்த திண்டல் ஊராட்சி மேல் சவுளுபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 31). டிரைவர். சின்னசாமிக்கும், அவருடைய மாமனார் பெரியண்ணன், அவரது சகோதரர் முருகன் ஆகியோருக்கும் இடையே நிலம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பம்புசெட்டு மோட்டார் வயர் எடுத்தது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த மோதலில் சின்னசாமி (31), சுரேஷ் (35), பிரகாஷ் (28), கிருஷ்ணன் (40) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து சின்னசாமி கொடுத்த புகாரின்பேரில் காரிமங்கலம் போலீசார் முருகன் (60), கனகு (38), குகன் (21), தர்ம சாஸ்தா (31) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கனகு என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்