கெங்கவல்லி:
கெங்கவல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் கடம்பூர் பகுதியில் குமரேசன் என்பவரது வீட்டிலும், அய்யனார் கோவில் தெருவில் ராணி என்பவரது வீட்டிலும் சோதனை நடத்தினர். அங்கு மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. உடனே போலீசார் வழக்குப்பதிவு செய்து குமரேசன், ராணி இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 50 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.