தோட்டத்தில் கஞ்சா பயிரிட்டவர் கைது

தோட்டத்தில் கஞ்சா பயிரிட்டவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-01-26 21:41 GMT

கொளத்தூர்:

சேலம் மாவட்டம் கொளத்தூரை அடுத்த கோவிந்தபாடி ஆனைகவுண்டன் ஊரை சேர்ந்தவர் சிவா (வயது 40). இவர் தன்னுடைய தோட்டத்தில் கஞ்சா பயிரிட்டுள்ளதாக கொளத்தூர் போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் அவரை கண்காணித்து வந்தனர்.

அப்போது சிவா கஞ்சா செடிகளை பிடுங்கி தன்னுடைய மோட்டார் சைக்கிளில் எடுத்துக் கொண்டு சென்றதாக தெரிகிறது. போலீசார் அவரை பின்தொடர்ந்து சென்று கஞ்சா செடியுடன் மடக்கி பிடித்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் சிவாவை கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள், கஞ்சா செடியை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்