ஏரியூர்:
ஏரியூர் அருகே உள்ள சிடவம்பட்டி பகுதியில் ஏரியூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புளியமரத்தூர் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவது தெரியவந்தது. அவர்களை சுற்றி வளைத்து பிடித்த போலீசார், விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் புளியமரத்தூரை சேர்ந்த நாகராஜ் (வயது 55), வெங்கடேசன் (40), சிலம்பரசன் (33), சின்னகண்ணு (60) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் 4 மொபட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.