அரூர்:
அரூர் அருகே பயர்நாயக்கன்பட்டியில் சாராயம் காய்ச்சுவதாக துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி கணேசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் கமலநாதன் தலைமையிலான தனிப்படையினர் பயர்நாயக்கன்பட்டியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த பழனி (வயது 67) தனது தோட்டத்தில் சாராயம் காய்ச்சியது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 8 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார், 15 லிட்டர் ஊறலை அழித்தனர்.