மாரண்டஅள்ளி:
மாரண்டஅள்ளி சுற்றுவட்டார பகுதியில் கள் இறக்கி விற்பனை செய்து வருவதாக பாலக்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு சிந்துவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது இதையடுத்து மாரண்டஅள்ளி போலீசார் அமானி மல்லாபுரம், எம்.ஜி.ஆர். நகர், அத்திமுட்டு, ஆத்துமேடு, அகரம் இ.பி. ஆபீஸ் பின்புறம் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கள் விற்று கொண்டிருந்த விற்பனை செய்த கிருஷ்ணன் (வயது 45), குமரவேல் (40), நாகராஜ் (55), காமராஜ் (48) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.