மதுபாட்டில்கள் விற்ற 2 பேர் கைது

Update: 2023-01-17 18:45 GMT

அரூர்:

அரூர் கோட்ட தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீசார் அரூர், கோட்டப்பட்டி, கம்பைநல்லூர் ஆகிய பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சின்னதம்பி (வயது 60), சின்ராஜ் (70) ஆகியோர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 578 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்