லாரி டிரைவர் கொலையில் நண்பர் கைது

லாரி டிரைவர் கொலையில் நண்பர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-11 22:42 GMT

தாரமங்கலம்:

தாரமங்கலம் அருகே பெரியசோரகை பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் மணி (வயது53). இவரை கடந்த 8-ந் தேதி கொலை சயெ்து 6 துண்டுகளாக வெட்டி உடலை கிணற்றில் வீசி விட்டனர். இதுகுறித்து தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த கொலை தொடர்பாக மணியின் நண்பரான செல்லான் என்ற செல்வராஜை (52) பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்தது தெரிய வந்தது. இந்த கொலை தொடர்பாக செல்லான் என்ற செல்வராஜை போலீசார் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்