மனைவியை கொலை செய்ய முயன்ற வழக்கில் 18 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த லாரி டிரைவர் கைது

மனைவியை கொலை செய்ய முயன்ற வழக்கில் 18 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-10 20:56 GMT

கொண்டலாம்பட்டி:

சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள ராக்கிப்பட்டியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 50) லாரி டிரைவர். இவரது மனைவி செல்லம்மாள் (48). இவர் கடந்த 9.3.2014 அன்று தனது கணவர் பணம் மற்றும் நகை வாங்கி வரும்படி அடித்து கொடுமைப்படுத்துவதுடன், கொலை செய்ய முயன்றார் என்று கொண்டலாம்பட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார் அந்த பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராமலிங்கத்தை கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் சிறையில் அடைந்தனர். சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தவர், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டார். கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை போலீஸ் இன்ஸ்பெக்டர் உஷாராணி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் மகளிர் போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதி அச்சல் வாடியில் தலைமறைவாக இருந்த ராமலிங்கத்தை போலீசார்மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்