காரைக்குடி,
காரைக்குடி துணை சூப்பிரண்டு ஸ்டாலின் தலைமையில் செயல்படும் சப்-இன்ஸ்பெக்டர் உதய குமார் தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் செட்டிநாடு போலீஸ்சரகம் நேமத்தான்பட்டி அருகே வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது புதுக்கோட்டை மாவட்டம் ஆதனூரில் இருந்து அனுமதி இன்றி லாரிகளில் எம்.சாண்ட் மற்றும் கிராவல் மணல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக மணல் கடத்தி வந்த காரைக்குடி பாரி நகரை சேர்ந்த முத்துக்குமார் (வயது 33), புதுக்கோட்டை மாவட்டம் ராயவரம் பகுதியை சேர்ந்த ரமேஷ் (42), கோட்டையூரை சேர்ந்த மதன்குமார் (24), கீழவேதியங்குடியைச் சேர்ந்த சாத்தப்பன் (43) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 4 லாரிகளை மணலுடன் போலீசார் பறிமுதல் செய்தனர்.