மின் கம்பியை திருடியவர் கைது

மின் கம்பியை திருடியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-07 19:15 GMT

அம்மாப்பேட்டை அருகே உள்ள தோழவன்னியன் குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் சிகாமணி (வயது39). இவருடைய வயல் ராராமுத்திரக்கோட்டையில் உள்ளது. இந்த வயலில் உள்ள மின் மோட்டார் ஷெட்டில் இருந்து மின் கம்பிகள் திருட்டு போயின. இதுகுறித்து அவர் அம்மாப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ராராமுத்திரக்கோட்டை கிராமம் கீழத்தெருவை சேர்ந்த சுதாகர் (40) வயல்வெளியில் மின் கம்பிகளை திருடியது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதாகரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்