பாலக்கோடு அருகே வனப்பகுதியில் கொட்டகை அமைத்த 2 பேர் கைது

பாலக்கோடு அருகே வனப்பகுதியை ஆக்கிரமித்து கொட்டகை அமைத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-01-07 18:45 GMT

பாலக்கோடு:

வனப்பகுதியில் கொட்டகை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பிக்கிலிகாப்புக்காட்டு பகுதியில் கொட்டகை அமைத்து வனவிலங்குகளை சிலர் வேட்டையாடி வருவதாக பாலக்கோடு வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது, இதையடுத்து வனச்சரகர் நடராஜ் தலைமையில் வனத்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

அங்கு மலையூர் பகுதியை சேர்ந்த சஞ்சீவன் (வயது 45), அதே பகுதியை சேர்ந்த சங்கர் (37) ஆகியோர் அனுமதியின்றி யானைகள் செல்லும் வழித்தடத்தில் கொட்டகை அமைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரையும் பிடித்து வனத்துறையினர் விசாரித்தனர்.

2 பேர் கைது

இதில் அவர்கள் 2 பேரும், காட்டுமரங்களை வெட்டி, ஆட்டுபட்டி அமைத்து, நாய்களை வைத்து வனவிலங்குகளை விரட்டி வந்தது தெரிய வந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வனச்சரகர் நடராஜ், அவர்கள் இருவரையும் கைது செய்தார். மேலும் அவர்கள் இருவரும் வைத்திருந்த அரிவாள்கள், டார்ச்லைட் உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்