விவசாயியை தாக்கிய 3 பேர் கைது
விவசாயியை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சாயல்குடி,
சாயல்குடி அருகே கன்னிகாபுரி கிராமத்தை சேர்ந்தவர் செபஸ்டின் மகன் தொம்மை (வயது 25). விவசாயி. சம்பவத்தன்று இவர் மூக்கையூர் சாலையின் ஓரமாக உள்ள நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார் அப்போது பெருநாழி வெள்ளாங்குளம் கிராமத்தை சேர்ந்த மாரிச்செல்வம், முத்துக்குமார், தினேஷ் கார்த்திக், திருக்கண்ணன், திருச்சுழி கிராமத்தை சேர்ந்த சுபாஷ், மதுரையை சேர்ந்த வசந்த் ஆகியோர் அங்கு மோட்டார்சைக்கிளில் வந்து, தொம்மையிடம் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் சாயல்குடி சப்-இன்ஸ்பெக்டர் சல்மோன் வழக்குப்பதிவு செய்து மாரிச்செல்வம், சுபாஷ், தினேஷ் கார்த்திக் ஆகியோரை கைது ெசய்தார்.