சமோசா வாங்கி விட்டு பணம் தர மறுத்து மிரட்டியவர் கைது

சமோசா வாங்கி விட்டு பணம் தர மறுத்து மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-06 18:45 GMT

ராமநாதபுரம் கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் யாதவ் (வயது 38). இவர் ராமநாதபுரம் தலைமை அஞ்சலகம் அருகில் பானிபூரி கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இவரின் கடைக்கு நேற்று முன்தினம் குடிபோதையில் வந்த ராமநாதபுரம் பெரியார்நகரை சேர்ந்த சுரேஷ்கண்ணா (36) என்பவர் சமோசா வாங்கிவிட்டு பணம் தராமல் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. சஞ்சய்யாதவ் பணம் கேட்டபோது தர மறுத்ததுடன் ஆபாசமாக பேசி மிரட்டினாராம். இதுகுறித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்கண்ணாவை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்