பாப்பாரப்பட்டி அருகேஆட்டோவில் கஞ்சா விற்றவர் கைது

Update: 2023-01-05 18:45 GMT

பாப்பாரப்பட்டி:

பாப்பாரப்பட்டி அருகே உள்ள புதுகரம்பு கிராமத்தை சேர்ந்தவர் கோபால் (வயது 43). இவர் ஆட்டோவில் இளநீர் வியாபாரம் செய்து வந்தார். அப்போது இவர் மறைமுகமாக கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக பாப்பாரப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் இவருடைய ஆட்டோவில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது 300 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கோபாலை கைது செய்தனர். ஆட்டோ மற்றும் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்