கருங்கல்பட்டியில் 1¼ டன் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் பிடிபட்டனர்

கருங்கல்பட்டியில் 1¼ டன் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் பிடிபட்டனர்.

Update: 2022-12-31 22:32 GMT

அன்னதானப்பட்டி:

சேலம் கருங்கல்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் சிலர் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு கடத்தி விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சில நபர்கள் கர்நாடக மாநிலத்திற்கு கடத்துவதற்காக சரக்கு ஆட்டோவில் ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டிருந்தனர்.

இது குறித்த தகவலின் பேரில், உணவுப்பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அங்கு ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டதாக, கருங்கல்பட்டி பாண்டுரங்கன் கோவில் தெருவை சேர்ந்த பாலு (வயது 21), அவருக்கு உதவி செய்த அம்மாப்பேட்டை தாதம்பட்டி பகுதியை சேர்ந்த அஜீத் (21) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1¼ டன் அரிசி மூட்டைகள், சரக்கு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்