ரவுடி கொலையில் நண்பர் கைது

ரவுடி கொலையில் நண்பர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-12-30 19:09 GMT

நாகமலைபுதுக்கோட்டை, 

நாகமலைபுதுக்கோட்டை சின்னக்கண்ணு நகரை சேர்ந்த ராஜாராம் மகன் உதயக்குமார் என்கிற கொக்கிகுமார் (வயது 28). பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கொக்கிகுமாரும், ஐவகர் நகரை சேர்ந்த விக்னேஷ் மற்றும் சின்னக்கண்ணு நகரை சேர்ந்த கார்த்திக் ஆகியோரும் நண்பரகள் ஆவர். விக்னேசின் செல்போனை குமார் திருடியதாக கூறி அவரிடம் விக்னேஷ் மற்றும் கார்த்திக் ஆகியோர் தகராறு செய்தனர்.

இந்நிலையில் நாகமலைபுதுக்கோட்டை அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி காம்பவுண்டிற்குள் கொக்கிகுமார் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக நாகமலைபுதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கொக்கி குமார் கொலை தொடர்பாக விக்னேசை போலீசார் கைது செய்தனர்.

===== 

Tags:    

மேலும் செய்திகள்