பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்ற ஜவுளிக்கடை உரிமையாளர் கைது

Update: 2022-12-27 19:38 GMT

தலைவாசல்:

தலைவாசல் அருகே வடக்கு தியாகனூர் பெருமாள் கோவில் தெருவில் ரமேஷ் பாபு மனைவி உமா பரமேஸ்வரி (வயது 28) என்பவர் வசித்து வருகிறார். ரமேஷ் பாபு 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக உமா பரமேஸ்வரி தலைவாசலில் உள்ள தனியார் ஜவுளிக்கடையில் விற்பனையாளராக வேலை செய்து வருகிறார். இதற்கிடையே ஜவுளிக்கடை உரிமையாளரான கலையரசன் என்பவர் உமா பரமேஸ்வரியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த உமா பரமேஸ்வரி இதுகுறித்து தலைவாசல் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் ஜவுளிக்கடை உரிமையாளர் கலையரசன் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்