விவசாய நிலத்தில் கஞ்சா பயிரிட்டவர் கைது

Update: 2022-12-24 18:45 GMT

பென்னாகரம்:

பென்னாகரம் அருகே உள்ள பெரியதோட்டம் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 50). விவசாயி. இவர் தனது விவசாய நிலத்தில் கஞ்சா செடிகள் பயிரிட்டு இருப்பதாக பென்னாகரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வன், சப்-இன்ஸ்பெக்டர் துரை மற்றும் போலீசார் பெரிய தோட்டம் புதூரில் உள்ள கிருஷ்ணனின் நிலத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அதில் விவசாய நிலத்தில் 10 கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கஞ்சா செடி பயிரிட்ட கிருஷ்ணனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்