புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது

புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-12-23 19:19 GMT

பேரையூர், 

டி.கல்லுப்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டி.கல்லுப்பட்டியை சேர்ந்த ரவிசங்கர் (வயது 47) என்பவர் தனது பெட்டிக்கடையில் விற்பனை செய்வதற்காக ஒரு கிலோ 600 கிராம் புகையிலை பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் என்.முத்துலிங்காபுரத்தை சேர்ந்த சரவணன் (38) என்பவர் டி.கல்லுப்பட்டியில் உள்ள பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் புகையிலை பொருட்கள் விற்றபோது அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்