மதுபாட்டில்கள் விற்றவர் கைது

பள்ளிபாளையத்தில் மதுபாட்டில்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-12-23 18:45 GMT

பள்ளிபாளையம்

பள்ளிபாளையம் பெரியார் நகர் பகுதியில் அரசு அனுமதி இன்றி மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பள்ளிபாளையம் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் தலைமையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது பெரியார் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது57) அங்கு மது விற்றது தெரியவந்தது. அவரை கைது செய்து போலீசார் அவரிடமிருந்து 21 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்