பள்ளிபாளையத்தில் மது விற்ற பெண்கள் உள்பட 3 பேர் கைது

Update: 2022-12-11 18:45 GMT

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் காவிரி ஆர்.எஸ். பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர். அதில் அதே பகுதியை சேர்ந்த கல்யாணி (வயது 45), செல்வி (42) ஆகியோர் மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார், சப்-இன்ஸ்பெக்டர் சண்முகபிரியா ஆகியோர் கைது செய்தனர்.

இதேபோல் ஆண்டிகாடு பகுதியில் சட்டவிரோதமாக மது விற்ற மாரிமுத்து (72) என்பவரை போலீஸ் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 15 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்