பயணியிடம் செல்போன் பறித்தவர் கைது

பயணியிடம் செல்போன் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-12-01 21:32 GMT

சூரமங்கலம்:

சேலம் தாதம்பட்டி கார்த்தி நகர் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மகன் முருகேசன் (வயது 31). இவர் சேலத்தில் இருந்து திருப்பதி செல்வதற்காக சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் 5-வது நடைமேடைக்கு வந்தார். பின்னர் கன்னியாகுமரி - புனே எக்ஸ்பிரஸ் ெரயிலில் (வண்டி எண் 16382) முன்பதிவில்லா பெட்டியில் ஏறினார். அப்போது அவர் வைத்திருந்த செல்போன் திருட்டு போனது. அதைத்தொடர்ந்து திருப்பதிக்கு சென்று விட்டு மீண்டும் நேற்று சேலம் வந்தார். மேலும் இது குறித்து அவர் சேலம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் சேலம் கூட்ஷெட் அருகே சந்தேகப்படும்படியான வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார், அவரை பிடித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கேரள மாநிலம் மலப்புரம், கருவரக்குண்டு பகுதியை சேர்ந்த அனிஷ் (வயது39) என்பதும், முருகேசனிடம் இருந்து செல்போனை பறித்து சென்றதும் தெரியவந்தது, இதையடுத்து அவரை போலீசார் கைது செய்ததுடன் அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்