பவானி அருகே கோவிலின் பூட்டை உடைத்து நகை- வெள்ளி பொருட்கள் திருடியவர் கைது

பவானி அருகே கோவிலின் பூட்டை உடைத்து தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-12-01 21:28 GMT

பவானி

பவானி அருகே கோவிலின் பூட்டை உடைத்து தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

திருட்டு

ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த காலிங்கராயன்பாளையம் அருகே சென்னநாயக்கனூர் பகுதியில் ஓங்காளியம்மன் கோவில் உள்ளது. கடந்த மாதம் இந்த கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு 10 பவுன் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போயின. இதுகுறித்த புகாரின் பேரில் சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடியவரை வலைவீசி தேடி வந்தனர்.

கைது

இந்த நிலையில் பவானி காலிங்கராயன்பாளையம் பகுதியில் சித்தோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகையன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள தனியார் வங்கி அருகே சந்தேகப்படும் வகையில் ஒருவர் கையில் பையுடன் நின்று கொண்டிருந்தார். உடனே அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், 'அவர் திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியை சேர்ந்த தேவேந்திரன் (வயது 51) என்பதும், அவர்தான் சென்னநாயக்கனூர் ஓங்காளியம்மன் கோவில் பூட்டை உடைத்து அங்கிருந்த அம்மன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்றதும்,' தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து தேவேந்திரனை போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 10 பவுன் நகை மற்றும் ½ கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.4 ஆயிரம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்