என்ஜினீயரிங் கல்லூரி மாணவி கடத்தல்-தொழிலாளி கைது

Update: 2022-12-01 18:45 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவரை கடந்த அக்டோபர் மாதம் 10-ந் தேதி சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கட்டிநாமக்கன்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி அருண் (வயது 25) கடத்தி சென்றார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் பாப்பிரெட்டிப்பட்டி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் கல்லூரி மாணவி, சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை மீட்டனர். மேலும் மாணவியை கடத்திய அருணை தேடி வந்தனர். இந்தநிலையில் தலைமறைவாக இருந்த அருண் நேற்று கைது செய்யப்பட்டார். 

மேலும் செய்திகள்