மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர் கைது

மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-11-30 17:35 GMT

மங்கலக்குடி,

திருவாடானை தாலுகா மங்கலக்குடி அருகே உள்ள ஊமை உடையான்மடை கிராமத்தை சேர்ந்தவர் முகமது சுல்தான்.

இவரது மனைவி மக்முதாபீவி (வயது80). இவர் வீட்டுத் திண்ணையில் படுத்து இருந்தபோது முககவசம் அணிந்து சென்ற வாலிபர் மூதாட்டி கழுத்தில் அணிந்து இருந்த 4½ பவுன் நகையை பறித்துவிட்டு தப்பி ஓடிவிட்டான்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

திருவாடானை போலீஸ் துணை சூப்பிரண்டு நிரேஷ் உத்தரவின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், சப்- இன்ஸ்பெக்டர் கணேசன் ஆகியோர் தலைமையில் போலீசார் அப்பகுதி யில் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதன் அடிப்படையில் மதுரை திருமங்கலம் எலியார்பத்தி சுரேஷ் என்பவர் மகன் சந்தோஷ் (20) என்பவரை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்