சிறுமியை காதலிக்க வற்புறுத்திய வாலிபர் கைது
சிறுமியை காதலிக்க வற்புறுத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
எஸ்.புதூர்,
எஸ்.புதூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் அரசு பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று அந்த சிறுமி பள்ளி முடிந்து வீட்டுக்கு சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது கல்லங்காளப்பட்டி கிராமத்தை சேர்ந்த ரவி மகன் சிவனேஷ்வரன் (வயது 22) சிறுமியை வழிமறித்து தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி, தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய் உலகம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிவனேஷ்வரனை கைது செய்தனர்.